தருமபுரி, ஆகஸ்ட் 16 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் LIG பகுதியில் உள்ள பூங்காவிற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள தேசிய கொடி கம்பத்தில் 79 வது சுதந்திர தின விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் என். சரவணன், செயலாளர் மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் TNHB பாலக்கோடு தலைமையில் நடைபெற்றது.
இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை வழக்கறிஞர்
B. கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஹவுசிங் போர்டு பாலக்கோடு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், துணை செயலாளர் ஏ. லோகநாதன், துணை தலைவர் அம்மாசியம்மாள், சாந்தா முனியப்பன், சரஸ்வதி, யாசோதா சரவணன் மாதன் சி. சீனிவாசன், முனியப்பன் சாந்தம்மாள், உஷாமுனிரத்தினம், சட்ட தூண் மாவட்ட நிர்வாகி பி.கே. சிவா சீரஞ்சிவி, TSTC ஒட்டுநர் பழனிசாமி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ கோவிந்தராஜ் வாசுதேவன், சந்திரமோகன், அயூப் மற்றும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொது மக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



