By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்

Last updated: July 27, 2026 6:39 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 27 –

தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள குப்பாகவுண்டர் தெருவில் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் வருடாந்திர ஆடித்திருவிழா, பக்தி நிறைந்த சூழலில் தொடங்கியது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழா, இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி குப்பாகவுண்டர் விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், அம்மனின் திருநாமங்களை முழங்கியபடி, பக்தர்கள் தலையில் பால்குடங்களை சுமந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த பால்குட ஊர்வலம் குப்பாகவுண்டர் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தருமபுரி கடைவீதி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வழியாக மீண்டும் குப்பாகவுண்டர் தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலம் சென்ற வழியெங்கும் பக்தர்கள் வரவேற்று, தீபாராதனை காட்டி அம்மனின் அருளைப் பெற்றனர்.

பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பக்தி உணர்வுடன் பால்குடம் ஏந்தி கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. மேளதாளங்கள் முழங்க, அம்மன் பக்திப் பாடல்கள் ஒலிக்க, பக்தர்களின் கோஷங்களால் நகரமே ஆன்மிகச் சூழலால் நிரம்பியது.
பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அருள்மிகு மாரியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த புனித பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர்கள் மற்றும் பல்வேறு அலங்காரங்களால் அம்மன் எழில்மிகு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற உள்ளது. இதே போல் கோவிலில் அருள் பாலிக்கும் விநாயகர், மகாலட்சுமி, மகாவிஷ்ணு மற்றும் முருகப்பெருமான் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு திருவிழாவில் தருமபுரி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்றனர். பக்தர்களின் திரளான பங்கேற்பால் குப்பா கவுண்டர் தெரு முழுவதும் திருவிழா கோலமாக காட்சி யளித்தது. விழா குழுவினர் சார்பில் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமாநிலம்

டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

March 13, 2025
69 Views
குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
ரூ. 2.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி இடம் திறந்த வைப்பு
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account