ராமநாதபுரம், ஆக.26:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) 31-ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 32-ஆம் ஆண்டு தொடங்கியதையொட்டி, தமுமுக மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நல்நெஞ்சங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 31 ஆண்டுகளாக தமுமுக மேற்கொண்டு வரும் மனிதநேயப் பணிகள், சமூகநீதிப் பணிகள் மற்றும் மக்கள் சேவைகளை நினைவுகூர்ந்துள்ளார்.
2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனிதநேய அவசர ஊர்தி சேவை, தற்போது 220-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், குருதிக்கொடை முகாம்கள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் கொரோனா கால சேவைகள் மூலம் தமுமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“1995 முதல் 2026 வரை… சேவையிலும் சமூக நீதியிலும் தொடரும் நெடும் பயணம்!” எனக் குறிப்பிட்ட சாதிக் பாட்ஷா, 32-ஆம் ஆண்டு தொடக்கத்தில் களப்பணியாற்றும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நல்நெஞ்சங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



