தென்காசி, ஜூன் 22 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தவெக நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய் முகம் பதித்த கேக்கை வெட்டி கொண்டாடினர். அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இலஞ்சி ஆரம்ப ஜோதி ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலகரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலையான் தெரு கோபால் ராம், மேலகரம் பேரூர் கழக செயற்குழு உறுப்பினர்கள் ஹரிஹரசுதன், தேவராஜன், தென்காசி ஒன்றிய பொருளாளர் குட்டி சிவா, தென்காசி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அரிகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெரி, மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் தவெக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



