தஞ்சாவூர், ஜூலை 30 –
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் யூத் ரெட் கிராஸ் மாணவிகளுக்கு ரெட் கிராஸ் குறித்து பயிற்சி வகுப்பு. கல்லூரி முதல்வர் முனைவர் விக்டோரியா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட கிளையின் பொருளாளர் ஷேக்நாசர், இந்திய ரெட் கிராஸ் தஞ்சை மாவட்ட கிளையின் மூத்த நிர்வாக குழு உறுப்பினரும் யூத் ரெட்கிராஸ் ஆலோசகருமான ஜெயக்குமார், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியருமான முனைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் வித்யா, பேராசிரியர் ஜெயசுதா ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு யூத் ரெட் கிராஸ் மாணவிகள் கலந்து கொண்டனர்.