By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Last updated: June 2, 2026 4:56 pm
June 2, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 2 –

குமரியில் நாளை மறுநாள் புதிய ஆண்டு கல்விக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் தக்கலை சரகத்திற்குட்பட்ட, கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் மாணவர்கள் இயற்கையான சூழலில் கல்வி கற்கும் வகையில் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புற சூழல், கழிப்பறைகள், குடிநீர் வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திட வேண்டும். ஆசிரியர்களாகிய நீங்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மருத்துவம் உள்ளிட்ட மேல்படிப்புகளுக்கான முன்னுரிமை, அரசு வேலைகளில் முன்னுரிமைகள் குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு மாணவர்களிடையேவுள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அத்திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எந்த வகையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என நன்கு புரிந்து கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக விரைவுப் பலகையினை நன்கு பயன்படுத்திட கற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கும்போது மாணவர்கள் எளிதாக, ஆர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்திட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர் த.ஜெயசிங், தலைமை ஆசிரியர்கள் ஜோஸ் பிரகாஷ் (கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி), தி.தமிழ்ச்செல்வி (இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆசிரியை சாரதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
தமிழக வெற்றி கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

September 27, 2025
32 Views
வணிக நிர்வாகவியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம்
சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி
முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account