சென்னை, ஜூலை 24 –
டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான டாஃபே மோட்டார்ஸ் அண்ட் டிராக்டர்ஸ் நிறுவனம் புதிய ட்யூட்ஸ் என்ஜின் உற்பத்தி மையத்தை ராஜஸ்தான் ஆல்வாரில் அம்மாநில அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் திறந்து வைத்தார். உடன் டாஃபேவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன், துணைத்தலைவர் மல்லிகா வேணு, சி.இ.ஓ சந்தீப் சின்ஹா, டியூட்ஸின் சி.இ.ஓ செபாஸ்டியன் ஷுல்டே ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கூட்டத்தில் உரையாற்றியபோது, மாநிலத்தில் டாஃபே-ன் முதலீட்டைப் பாராட்டிய அவர் “தற்சார்பு இந்தியாவின் தேசிய குறிக்கோள்களுக்கு பங்களிக்கும் அதே நேரத்தில் உலகத்திற்காக ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டது’ என்ற தொலைநோக்குப் பார்வை பாராட்டதக்கது. மேலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான உற்பத்தி மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு புதுமை, திறன் வளர்ப்பதில்
டாஃபே-யின் பணியாளர்கள், சப்ளை செயின் பார்ட்னர்கள் மற்றும் அடுத்த தலைமுறை தலைமையின் உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன் என்றார்.
மேலும் மல்லிகா சீனிவாசன்தெரிவித்ததாவது: “டாஃபே மற்றும் அமால்கமேஷன்ஸ் குழுமம் ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவின் மிகப்பெரிய என்ஜின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும் . உற்பத்தி திறன் 2030 க்குள் ஆண்டுதோறும் 4,00,000 முதல் 5,50,000 என்ஜின்களாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஐரோப்பாவின் முன்னணி என்ஜின் உற்பத்தியாளர்களில் ஒருவரும், டீசல் என்ஜின் தொழில்நுட்பத்தில் முன்னோடியுமான ட்யூட்ஸ் உடனான எங்கள் பார்ட்னர்ஷிப் ஜெர்மன் பொறியியலின் துல்லியத்தையும் இந்தியாவின் உற்பத்தி திறன்களின் வலிமையையும் ஒன்றிணைக்கிறது என்றார்.



