தக்கலை, ஜூலை 30 –
தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ஆல்வின் சஜின் (36) தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று மதியம் வீட்டில் இருந்த ஆல்வின் சஜின் குளிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கால்வாய்க் கரைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கால்வாயின் உள்ளே விழுந்துள்ளார். அதன் பிறகு அவர் வெளியே வராததால் அங்கிருந்தவர்கள் தண்ணீரில் தேடினர்.
இந்த நிலையில் நீரில் மூழ்கிய ஆல்வின் சஜின் அங்குள்ள ஒரு தடுப்பு அருகே கிடப்பது தெரியவர, பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த அங்கு பின்னர் அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த விட்டு ஆல்வின் சஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை வின்சென்ட் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


