ஈரோடு, செப்.14:
ஈரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கிளை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 20-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் கடையின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, ஈரோடு கிளையின் மண்டல மேலாளர் சுனில்குமார், மேலாளர் பிரசாந்த் மற்றும் துணை மேலாளர் வினோத் ஆகியோர் கூறுகையில், 20-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 30 சதவீதம் வரை சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு கொள்முதலுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.



