சேலம், ஜூலை 6 –
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, அவர்களுக்கான உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 448 மனுக்கள் வந்தன.
மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் அவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் 34 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கையை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ 1900/= மதிப்பில் ரூ 7600/= மதிப்பில் ஊன்றுகோல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் வழங்கினார்.



