சேலம், ஜூன் 8 –
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு அலுவலகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனு மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கோரி 380 மனுக்கள் வர பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட குறைதீர் முகாமில் 63 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1400/= மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு கண் பார்வை அற்றோருக்கான பிரெய்லி கை கடிகாரமும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு 1800 ரூபாய் மதிப்பில் ஊன்றுகோல், ஒரு மாற்று திறனாளிக்கு ரூ 70 ஆயிரம் மதிப்பில் மின்கலத்தால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள் ஒன்று மற்றும் ரூ 26, 800/= மதிப்பில் செயற்கை கால் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.



