சேலம், ஆக. 29:
சேலம் பிருந்தாவன் சாலையில் செயல்பட்டு வரும் எஸ்கேஎஸ் மகளிர் நல மருத்துவ மையம் மற்றும் கருத்தரிப்பு மையத்தில், பிரத்யேக காஸ்மெட்டிக் கைனகாலஜி மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய மருத்துவ தளத்தை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதனின் குழந்தைகள் ஷாய்லின் மற்றும் ஷனாயா இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் எஸ்கேஎஸ் மருத்துவமனை சேர்மன் ஸ்ரீவசந்தா, நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன், இயக்குனர் சோமாநந்தா சுரேஷ், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சிற்பி மணி, கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவர் கவிதா நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன், “சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை சேலம் மக்களுக்கும் வழங்குவதே எங்களின் நோக்கம்” என்றார். பெண்களின் உடல் ஆரோக்கியத்துடன் மன தன்னம்பிக்கையும் முக்கியம் என குறிப்பிட்டார்.
புதிய மருத்துவ தளத்தில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுத் தொய்வு, மார்பகத் தொய்வு, அந்தரங்கப் பகுதியில் தளர்வு, சிறுநீர் கசிவு, தழும்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயிற்றுத் தசைகளை இறுக்குதல், கொழுப்பை குறைத்தல் உள்ளிட்ட அழகியல் சிகிச்சைகள் பெண் மருத்துவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பான முறையில் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



