திருப்பூர், ஜூலை 1 –
செந்தமிழர் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழகத் தலைவர் ஆர்.கே. ஜெகநாத சேதுபதி தலைமையில் புகார் மனு வழங்கினார்.
அதில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்து முனையத்தில் முன்னால் உள்ள வழித்தடங்களில் வண்டிக்கடை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்படைவதாகவும் மேலும் நகரும் மின் தூக்கி படிக்கட்டுகள் திறந்ததிலிருந்து பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.
அதனை உபயோகப்படுத்தினால் வயதானவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இனிவரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் இந்த நகரும் படிக்கட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் ஆக்கிரமிப்பு வண்டி கடை இருப்பதாகவும் அதனை அகற்றினால் புதிய பேருந்து நிலையம் பொலிவுடன் இருக்கும் என தெரிவித்தனர்.
உடன் கழக பொதுச் செயலாளர் கே. வடிவேல், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி கே. தேவி அவர்கள் திருப்பூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் திருமதி ராதாமணி மாணிக்கராஜ், கணியம்பூண்டி மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி. ருக்குமணி அம்மாள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் ரம்யா ரவின் ஆகியோர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



