சுசீந்திரம், ஜுலை 3 –
சுசீந்திரம் அருகே உள்ள மணவிளை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் வயது 47. கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே சென்றதாகவும் மனைவி ராஜலெட்சுமி ஜெயசீலன் குடிப்பழக்கம் உண்டு என்பதால் கணவரை தேடாமல் தூங்கி விட்டதாகவும் நேற்று காலை 6.30 மணி அளவில் மணவிளை கோட்டுபாறை குளத்தின் கரையில் ஜெயசீலனின் செருப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் இருந்ததாகவும் உடனே பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் குளத்தில் தேடிய போது ஜெயசீலன் இறந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துவிட்டு மனைவி ராஜலெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன ஜெயசீலனுக்கு சந்தியா வயது 22 என்ற மகளும் ஐஸ்வர்யா வயது 16 என்ற மகளும் ஐயப்பன் வயது 17 என்ற மகனும் உள்ளனர்.