சங்கரன்கோவில், ஜூலை 29 –
சங்கரன்கோவிலில் புதுமனை 4-ம் தெருவில் அமைந்துள்ள அரசினர் கால்நடை மருத்துவமனையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது பணியில் இருந்த மருத்துவர் ஜானகி மற்றும் பணியாளர்கள் மருத்துவமனைக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை ஏற்றுக்கொண்ட ராஜா எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், பயனாளிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணிகண்டன், நகர மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.