கோவை, ஜூன் 12 –
கோவை வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சியினை பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



