கோவை, ஜூலை 07 –
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில் கோவை கொடீசியா மைதானத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற 100 அரசு “மகளிர் விடியல் பயணம் பேருந்துகள்” தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு “விடியல் பயணம்” பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ. ரவி, கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எம்பி, மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தொமுச lpf பெரியசாமி, பீளமேடு பகுதி பொறுப்பாளர் ஏ.எஸ். நடராஜ், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அலுவலர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.