கன்னியாகுமரி , அக் : 10
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்றன. நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிகளில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
புதியதாக பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். ஆய்வின்போது வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



