By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: November 10, 2025 5:03 pm
November 10, 2025
26 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44 கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் வீரப்புலி அணை, பள்ளிகொண்டான் அணை, செட்டித்தோப்பு அணை, வீரமங்கலம் அணை, சபரி அணை, குமரி அணை, சோழன்திட்டை அணை, பிள்ளைபெத்தான் அணை, மிஷன் அணை உள்ளிட்ட 13 தடுப்பணைகள் உள்ளன. இதன்மூலம் 97 குளங்கள் பாசன வசதி பெறுவதுடன் 15 ஆயிரத்து 821 ஏக்கர் நிலங்கள் பயன் அடைகின்றன.

‎ பல்வேறு கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவையினை பூர்த்தி செய்வதால் விவசாயிகளின் ஜீவனாகவும் விளங்கும் பழையாறு தன் பெருமைகளை இழந்து களை இழந்து காட்சி அளிக்கிறது. மருத்துவமனை கழிவுகள், குப்பைகள் இந்நீரில் கொட்டப்படுவதோடு, நாகர்கோவில் மாநகரின் கழிவு நீர் இந்த ஆற்றிலேயே கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் உருவாகும் பிறப்பிடமாகவும் மாறிப்போனதால் மக்கள் இந்நீரை பயன்படுத்த அஞ்சும் நிலையே உள்ளது.

பழையாற்றில் உள்ள பல்வேறு தடுப்பணைகளின் மதகுகள் துருபிடித்த நிலையில் போதிய நீரை தேக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் பழையாற்றின் மூலம் 4 ஆயிரத்து 925 மில்லியன் கனஅடி நீர் கடலில் கலக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் ஆற்றில் நீர் இருப்பினும் குளங்களுக்கு சென்று சேராத நிலையினால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் காலங்களில் பழையாறை சொல்லி ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள் அதன் பின் மறந்துபோவதால் பழையாறு விமோசனம் பெறாத நிலையில் விடியலை எதிர்நோக்கி உள்ளது.

‎ நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், கிருஷ்ணசுவாமி கோவில், அழகம்மன் கோவில்களின் சுவாமி விக்கிரகங்கள் பழையாற்றில் நீராடி ஆறாட்டு நிகழ்வினை நடத்தியது உண்டு. ஆனால் இன்றோ ஆகாய தாமரைகளின் பெருக்கத்தாலும், பலரின் ஆக்கிரமிப்பாலும் பழையாறு பராமரிப்பு இன்றி பாழாய் போனது. குமரியின் கூவமாய் காட்சி அளிக்கும் இப்பழையாறை ஆக்கிரமிப்புகளின் பிடியில் இருந்து காத்திடவும், கழிவுநீர் கலவாமல் தடுத்திடவும், ஆகாய தாமரைக்குள் மூழ்கி உள்ள பழையாறு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
குழந்தைகளுக்கான மருத்துவமுகாம்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

சர்வதேச காது கேளாதோர் தினம் விழிப்புணர்வு பேரணி

September 28, 2024
39 Views
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
குழித்துறை ஆற்றில் கழிவு நீர் கலப்பு; பாஜ ஆர்ப்பாட்டம்
ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account