கன்னியாகுமரி, செப். 16 –
குமரி ரேசிங் பிரிஜியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற புறா பந்தயத்தின் பரிசளிப்பு விழா இன்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் கிளப் செயலாளர் ஸ்டீபன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசி பரிசுகளை வழங்கினார். கிளப் தலைவர் சுமான் சிங், துணைத் தலைவர் செல்வகிங்ஸ், கௌரவ தலைவர் ராஜாமணி, பொருளாளர் ஜவகர் மற்றும் அபி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
பரிசளிப்பு விழாவில் 100 கி.மீ முதல் 1000 கி.மீ வரை நடைபெற்ற பந்தயத்தில் முதல் சாம்பியனாக மயில் வீரா, இரண்டாம் சாம்பியனாக செல்வகிங்ஸ், மூன்றாம் சாம்பியனாக குமரி லாப்ட், நான்காம் சாம்பியனாக எட்ரோ லாப்ட் ஆகியோர் தேர்வு பெற்றனர். நிறைவாக கிளப் செயலர் புறா கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.



