கிருஷ்ணகிரி, ஜூன் 3 –
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே முத்தமிழரிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரன், நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம் ரகுமான் ஷரீப், வேலுமணி, பொதுக்குழு உறுப்பினர் ஜெகதேவி கிருபாகரன், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், சாந்தமூர்த்தி, இளையராஜா, அறிஞர், காந்தி, விஜி ராஜேந்திரன், தேங்காய் சுப்ரமணியன், சரவணன், மகேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர் தினேஷ் ராஜன், மாவட்ட பொறியாளர் அமைப்பாளர் காந்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அருள்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னதாய், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



