காரியாபட்டி, ஆகஸ்ட் 04 –
விருதுநகர் காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 39-வது விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் S.G டேனியேல் ஓய்வு பெற்ற விளையாட்டு இயக்குனர், பசுமலை மேல்நிலைப் பள்ளி தலைமையில் தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விழா துவங்கப்பட்டது.
மாணவர்களின் அணி வகுப்பு , கராத்தே, சிலம்பம், யோகா, மனித கோபுரம் போன்றவற்றை மாணவர்கள் நடத்தி காண்பித்தனர். இந்த போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மாணவர்கள், பள்ளித் தாளாளர் கீதா, முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.