ராமநாதபுரம் ,அக் : 13
ராமநாதபுரம் மாவட்டம், காணிக்கூர் ஒச்சத்தேவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ பாதாள காளியம்மன் தில்லுமா இடிப்பு திருவிழாவையொட்டி, 11-ம் ஆண்டு சூரிய ஒளி மாபெரும் கபடிப் போட்டி நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,011, இரண்டாம் பரிசாக ரூ.10,011, மூன்றாம் பரிசாக ரூ.7,011 வழங்கப்பட உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் கோவிலிங்குளம் சார்பு ஆய்வாளர் அவர்கள் தலைமை வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபடி வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



