வேலூர், அக் : 08
காட்பாடி காந்தி நகர் 8-வது மெயின் ரோட்டில் நிவி அகாடமி திறப்பு விழா உரிமையாளர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக காட்பாடி எம்.எல்.ஏ. மருத்துவர் எம். சுதாகர், தவெக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ. நவீன், தொழிலதிபர் இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி அகாடமியை தொடங்கி வைத்தனர்.
இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு கணினி கல்வி, தொழில்சார் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இ-மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



