திருப்பூர், மே 14 –
கருவம்பாளையம் காங்கிரஸ் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் பி.கோபால்சாமி வழிகாட்டுதலில் 43வது வார்டு தலைவி எஸ்.பிரேமலதா அறிவுறுத்தல் படி எஸ்.சாதிக்பாட்சா தலைமையில் காங்கிரஸ் கட்சியில் திமுக நிர்வாகி T.நாச்சிமுத்து 43வார்டு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தில் பயணித்தவர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டார். அவருக்கு வார்டு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வார்டு துணை தலைவர் அபுதாகீர் மற்றும் தோழர்கள் எஸ்.சேதுபதி மகளிர் அணி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.



