மார்த்தாண்டம், ஜன. 22 –
திருத்துவபுரம் வடக்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ் மனைவி ஸ்டெல்லா பாய் (57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்மமூர்த்தி (50) என்பவருக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவதினம் பத்ம மூர்த்தி சொத்து பிரச்சனையில் சமாதானம் பேச ஸ்டெல்லா பாயை அழைத்துள்ளார். இதை அடுத்து ஸ்டெல்லா பாய் பத்மமூர்த்தி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த பத்மமூர்த்தி அவரது மனைவி லதா, பத்ம மோகன் (54) அவரது மனைவி குமாரி (49) மற்றும் ஸ்ரீநிவாசன் (50), அவரது மனைவி ராதிகா (47) ஆகிய 6 பேர் சேர்ந்து ஸ்டெல்லா பாயை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஆபாச சைகை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து ஸ்டெல்லா பாய் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பெண்ணை மிரட்டிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


