கன்னியாகுமரி, நவ. 9 –
கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (45). லீபுரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினம் அருகில் உள்ள மற்றொரு விடுதியில் தங்கி இருந்த சிலர் இவர் வேலை பார்க்கும் ரிசர்ட் பகுதியில் வந்து அமர்ந்துள்ளனர். இதற்கு மகேந்திர குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் தகாத வார்த்தைகள் பேசி மகேந்திரகுமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். ஊழியர்கள் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


