திண்டுக்கல், ஆக. 16 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கேட்டையில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு பெரிய காளியம்மன் கோவிலில் கடைசி ஆடி நாளை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் வேண்டியும் மாபெரும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு பூசாரி இராமமூர்த்தி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இதில் பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் பாஸ்கர், சுரேஷ் பவுன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மன் புகழ் பாடி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இச்சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



