By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை

Last updated: July 28, 2026 6:41 pm
July 28, 2026
11 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 28 –

தீவிரமான மிட்ரல் வால்வு நோயின் பாதிப்பால் மூச்சுத் திணறலோடு, பெரும்பாலும் படுக்கையிலேயே முடக்கப்பட்டிருந்த ஒரு 14 வயது சிறுமிக்கு, உடலமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான பல்வேறு சவால்களை முறியடித்து, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் மிகவும் சிக்கலான மற்றும் அரிய ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இடது இதயக்கீழறை வெளியேறல் பாதையில் (LVOT) அடைப்புடன் கூடிய தீவிர ‘ஈரிதழ் பின்னொழுக்கு’ பிரச்சனை இந்தச் சிறுமிக்கு இருந்தது. சேதமடைந்த மிட்ரல் வால்வு காரணமாக, உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தம் சீராகச் செல்வதற்குப் பதிலாக, இடது ஏட்ரியத்திற்கு ரத்தம் பின்னோக்கிக் கசிந்தது. இதனால் இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு கடுமையான மூச்சுத்திணறலை இச்சிறுமி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறும் பாதை குறுகலாக இருந்ததால் நிலைமை இன்னும் சிக்கலாகி, இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை கடினமான செயல்பாடாக மாற்றியிருந்தது.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம், சேதமடைந்த மிட்ரல் வால்வு மாற்றப்பட்டு, ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. இதன் விளைவாக இதயம் வழியாகச் சீரான ரத்தம் ஓட்டம் மீண்டும் சாத்தியமானது. இந்தச் சிறுமிக்கு இருந்த இரண்டு அரிய வகை நோய்களினால் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப் பல மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அச்சிறுமிக்கு இடதுபுறத்திற்குப் பதிலாக மார்பின் மையப்பகுதியில் இதயம் அமைந்திருந்த ‘மீசோகார்டியா’ எனப்படும் ஒரு பிறவி குறைபாடும் இருந்தது. இந்த அசாதாரண உடல் அமைப்பியல் காரணமாக மிட்ரல் (இதய ஈரிதழ்) வால்வை அணுகி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது.

மேலும், அச்சிறுமிக்கு ‘மோர்கியோ சிண்ட்ரோம்’ என்ற அரிய பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறும் இருந்தது. இதனால் உடலில் சில சிக்கலான சர்க்கரை மூலக்கூறுகள் குவிந்து, கழுத்து முதுகெலும்பின் மேல் பகுதியில் உறுதியற்ற தன்மை உட்படப் பல எலும்பு குறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நேரம் முழுவதும் அச்சிறுமியின் கழுத்துப் பகுதியை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததால், மயக்க மருந்து வழங்கும்போதும் மற்றும் அறுவை சிகிச்சையின்போதும் மருத்துவக் குழுவினருக்கு இது கூடுதல் சவாலாக அமைந்தது.

குழந்தைகளுக்கான மார்பறை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.ஆர். நவீன் டேவிட்சன், இந்தச் சிறுமிக்குத் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவிற்கு தலைமை வகித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
சமூகப் பணியாளர் டாக்டர் டார்வின் மோசஸ்க்கு”சமூக தாக்கச் சாதனையாளர் விருது”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி

April 12, 2025
42 Views
வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்
திருப்பத்தூர் அடுத்த சௌளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முடிவுறாத தரை பாலத்தை விரைந்து முடிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு
முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account