ஊத்தங்கரை, ஜுன் 30 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை நகர குழு 15 வது மாநாடு கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இலகுமைய்யா கலந்து கொண்டு மாநாடு கொடியேற்றி தலைமை குழு தேர்வு செய்தார். தளி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆனந்தன், வேலை அறிக்கை மாநில குழு சின்னசாமி, பழனி, கண்ணு ஆகியோர் அறிக்கை மீது விவாதம் தொகுப்புரையில் பங்கேற்றனர்.
லோகநாதன், சத்தியராஜ், காமராஜ், பாத்திமா பீவி, பாபு என்கிற ஆமத்அலி, சிவரஞ்சனி, சர்தார், முனாப், மணிகண்டன், வினோத், பெருமாள் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் குமார் நன்றியுரை ஆற்றினார்.