ஊத்தங்கரை, செப். 9 –
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்களை (மண்) திருடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வட்டாட்சியர் மோகன்தாஸிடம் சமுக சேவகர் தனசிவம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசியநெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் கணிமவளம் (மண்) கொள்ளை சம்மந்தமாக கல்லுகானூர் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியின் கல் மற்றும் மண் திருட்டு நடைபெறுகிறது. இது அரசாங்க சொத்து, இதை அனுமதி இன்றி எடுக்க வேண்டாம் என்று பலதடவை கூறியும் நான் அப்படிதான் செய்வேன் உன்னால் முடிந்ததை பார் என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றார் அதே கிராமத்தைச் சேர்ந்த அமிரீதலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினர்.
இதுவரை மூன்று முறை காவல்துறை உதவி எண் 100 ல் புகார் அரிந்துள்ளோம். புகார் பதிவு எண் : 454609 TN20250 908007) BB5 08-Sep-2025, 340T00: 454523 [TH2025098000838
அப்பகுதியில் எங்கள் நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை கற்களால் அமைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினிர் இத்தகைய செயலால் எங்கள் வழிப்பாதையும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. ஆகையால் இந்த மனுவை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் சமுக சேவகர் தனசிவம் தெரிவித்துள்ளார்.



