By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்
சென்னை

உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்

Last updated: August 12, 2025 11:10 am
August 12, 2025
45 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 12 –

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் வாக்கத்தான் நடைபெற்றது.

எண்ணற்ற இளம் உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றலைக் கொண்ட குழந்தைகளுக்கான உறுப்பு தானத்திற்கு ஆதரவாக நடந்த இந்த வாக்கத்தானில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுகாதார உணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கும் கூட்டு முயற்சியாக ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை நடத்திய இந்த வாக்கத்தானை பிரபல நடிகையும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான தேவயானி கொடியசைத்து துவக்கி வைத்தார். உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 300 பேர் பங்கேற்று அங்குள்ள போலீஸ் பூத்திலிருந்து தலப்பாக்கட்டி ஓட்டல் வரை சென்று நிறைவு பெற்றது.

அதன் பின்னர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசகர் டாக்டர் சோமசேகர் கூறுகையில்: நாம் அனைவரும் ஒன்றுகூடி உறுப்பு தானம் என்பது ஒரு முக்கியமான உயிர்காக்கும் செயல் என்பதை வலியுறுத்துகிறோம். குறிப்பாக அவசர மற்றும் சிக்கலான மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த நடைபயணம் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை நன்கொடையாளர்களாக மாற ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானம் என்பது பலரது வாழ்க்கையில் மிகப்பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதேசமயம் அது குழந்தைகள் என்று வரும் போது அந்த பிஞ்சு உள்ளங்களின் வாழ்க்கையை மலரச் செய்வதால் அது இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3000 குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

ஆனால் அது சம்பந்தமான குறைந்த விழிப்புணர்வு, தாமதமான பரிந்துரைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றின் காரணமாக அது குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவரும் பலன் அடையும் வகையில் அது குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைபயணத்திற்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தேவைக்கும் கிடைக்கும் தன்மைக்கும் இடையில் அதிக இடைவெளி உள்ளது. மேலும் பெறப்படும் உறுப்பை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பதும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை இந்தத் துறையில் உறுதியாக சிறப்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அவசர மற்றும் சிக்கலான மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உறுப்பு தானம் என்பது ஒரு முக்கியமான, உயிர்காக்கும் செயலாகும். இந்த நடைபயணம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை உறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையம் திறப்பு விழா
அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஏர்வாடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

May 10, 2024
124 Views
பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி நீர் மோர் பழஜூஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
தொடக்கப்பள்ளி சார்பில் மதிய உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account