இஸ்ரேல், அக்: 10
விமானக் கடத்தலைத் தடுத்து, ஃபிளை துபாய் விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் உயரிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ளார்.
விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்றிய 6 பேருக்கு டெல் அவிவில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. காயமடைந்துள்ள ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய வாழ்த்திய அதிபர், அவர் வீடு திரும்பியதும் விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



