கோயமுத்தூர், மே 2,
கோயமுத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவலை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறைக்கு 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் அந்தத் துறையில் உள்ள கோவை சரக துணை கண்காணிப்பாளர் என்னிற்கும் 908744 6194 கோயமுத்தூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அலகு காவல் ஆய்வாளர் 949810360 உதவி ஆய்வாளர் 8825897695 ஆகியோரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் புகார் மற்றும் தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் இந்த தகவல் கோவை மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அலகு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.