By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்

Last updated: June 1, 2026 7:25 pm
June 1, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 1 –

அரசியலின் அடிப்படை நாகரீகத்தை கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி என தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், வைத்தியலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் டி கே ஜி நீலமேகம், ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகர செயலாளர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார்
கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மீதும், தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் நம்பிக்கை வைத்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கும் இணைந்து பணியாற்றிய வாக்களித்த கூட்டணி கட்சியினர் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

வருகின்ற 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி கருப்பு சிவப்பு கொடியேற்றி, ஆதரவற்ற முதியோர், மாணவ, மாணவிகள் விடுதிகளில் அறுசுவை உணவு வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவினரின் உழைப் பினால் காங்கிரஸ் கட்சி 5 சட்டசபை உறுப்பினர்களை வென்றன. தேசிய கட்சியாக இருந்து கொண்டு, தேர்தலுக்கு முன்பாகவே மாநில கட்சியான திமுக வாக்குகளால் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பெற்றனர். இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல் நன்றி உணர்ச்சியும் இல்லாமல் அரசியலில் அடிப்படை நாகரீகத்தை கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணிமாறி சென்றனர். சொந்த உழைப்பில் ஒரு நாளும் வெற்றி பெற முடியாத நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் இழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆட்சிப் பொறுப்பேற்று 21 நாட்களில் தமிழ்நாடு எங்கும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரீல்ஸ் ஆட்சியை நிறுத்தி விட்டு, ரியல் ஆட்சியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், கனகவள்ளி, புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
மதுரைக்கு 4 புதிய பேருந்து சேவைகள்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கோயம்புத்தூர்மாவட்டம்

சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்

May 14, 2025
46 Views
இலவச கண் சிகிச்சை முகாம்
ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
பாஜ உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்
குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account