கிருஷ்ணகிரி, ஜூலை 23 –
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் தமிழகம் முழுவதும் இன்று தியேட்டரில் திருவிழா போல ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் உயர்ந்துள்ளார் என்றும், அதிகாலை முதல் ரசிகர்களின் கொண்டாட்டம், சோசியல் மீடியா விமர்சனங்கள், அரசியல் விவாதம் என படம் பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் சமூக நுகர்வோர் நல்ல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஜனநாயகம் திரைப்படம் பெரும் அரசியல் நெருக்கடிக்கிடையே பல மாதங்கள் போராட்டத்திற்குப் பின் இன்று வெளியாகியுள்ளது. அதுவும் நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆக பதவி ஏற்ற பிறகு தான் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ஜனநாயகம் ரிலீஸ் தமிழகத்தில் திருவிழா போன்றே கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு மக்கள் முதல்வர் விஜயை உயர்ந்த இடத்தில் வைத்து பொதுமக்களும், ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும், அழகு பார்க்க தொடங்கி விட்டார்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு தான் 1977- ல் மீனவ நண்பன் என்கிற திரைப்படமும், அடுத்து மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமும் வெளியாகியிருந்தது. அது போலவே ஆந்திரா முதல்வராக இருந்த என்.டி.ஆரின் திரைப்படமும் வெளியாகியிருந்தது. அந்த வரிசையில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகம் திரைப்படமும் வெளி வந்துள்ளதால் மக்களும் முதல்வர் விஜய்யை, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் பார்க்க தொடங்கி விட்டார்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத ஆளுமையாக முதலமைச்சர் விஜய் உருவெடுத்து வருகிறார். அவருக்கு மக்கள் பலமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதாகவும், லஞ்ச லாவண்யம் பெருக்கெடுத்த அரசு அலுவலகங்களில் தற்போது சற்று குறைந்துள்ளதாகவும், மேலும் தேர்தல் வாக்குறுதிகளான மகளீருக்கு மாதம் 2500 ரூபாயும், வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4000 கொடுத்தால் முதல்வர் விஜய்யை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது எனவும் கூறினார்.



