கிருஷ்ணகிரி, மே 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்க அலுவலகத்தில் தேசிய தலைவர் பத்திரிக்கையாளர்களின் பாதுகாவலர் முனைவர் கவியரசு அவர்களின் திருக்கரங்களால் தமிழன் தொலைக்காட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் கே சி பெருமாள் வடக்கு மண்டல தலைவராக பொறுப்பை தேசிய தலைவர் அறிவித்தார். அவருக்கான அடையாள அட்டையை கொடுத்து கௌரவித்தார்.
அதே போன்று அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண்டல தலைவராக நியமனம் செய்த அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய தலைவர் கவியரசுக்கு மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



