தென்தாமரைகுளம், ஜூலை 3 –
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் சாலை விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் இளங்குமார் தலைமை தாங்கினார். முனைவர் தர்மரஜினி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் சுரேஷ் அறிமுகம் செய்தார்.
கன்னியாகுமரி காவல்நிலையப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் சாலைப் பாதுகாப்புக் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்வின் முடிவில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இராமகுமார் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பேராசிரியர்கள் பிரபுமாறச்சன், ரெத்னாகரன், சிவபிரசாத் மற்றும் அலுவலக உதவியாளர் சுரேஷ் உட்பட அனைத்துத் துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.