தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தருமபுரி நேரு யுகேந்திரா இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு யுவகேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக ஓட்டப்பந்தயம், சிலம்பாட்டம், வாலிபால், கயிறு இழுக்கும் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தருமபுரி வருவாய்த்துறை அலுவலர் சண்முகசுந்தரம், பெரியார் பல்கலைக்கழகம் இயக்குனர் பொறுப்பு மோகனசுந்தரம் ஆகியோர் சான்றிதழ்கள், கோப்பைகள், பதக்கங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பல்நோக்கு பணியாளர் முனியப்பன், அதியமான் டிவி நிறுவனர் கபில்தேவ், பாரம்பரிய சிலம்பு பயிற்சியாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



