நாகர்கோவில் ஜூன் 24
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் 17 வயதான இரண்டு இளம் சிறார்கள் விலை உயர்ந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து சாகசத்தில் ஈடுபட்டதால் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் இளம் சிறார்களுக்கு 18 வயது நிரம்பாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகனம் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம், அதிபயங்கரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட பால்பண்ணை பகுதியை சார்ந்த ராஜன் என்பவரின் 17 வயது மகன் , வடசேரி ஒழுங்குனசேரி பகுதியை சார்ந்த மோகன் என்பவரது 17 வயது மகன், ஆகிய இரண்டு இளஞ்சிரார்கள் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத இந்த இரு இளஞ்சிரார்களுக்கு வாகனத்தை கொடுத்து இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவ்விருவரின் தந்தைகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.