நீலகிரி. மார்ச். 18
ஊட்டி கேத்தி, குன்னூர்மற்றும் கோத்தகிரி நீலா கைம்பெண்கள் இயக்கத்தின் சார்பாக அகில உலக பெண்கள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து பெண்களின் மதிப்பு உரிமைகள், மரியாதைக்கான பதாகைகள் ஏந்தி ஊர்வலம் காமராஜர் சதுக்கம் வழியாக புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி கோத்தகிரி வந்தடைந்தது. விழாவுக்கு தலைவராக கோத்தகிரி நீதிபதி திருமதி வனிதா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி அவர்களும் மரியன்னை இல்லத்தின் தலைவி சகோதரி லூர்து மேரி அவர்களும் காவல் கோத்தகிரி காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் .பெண்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது .விழாவில் பெண்களை போற்றும் விதமாக, ஆடல், பாடல் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக வரவேற்புரை அருட் சகோதரி மோட்ச அலங்கார மேரி நிகழ்த்தினார். ,நிகழ்ச்சி தொகுப்பாளராக கதைசொல்லி நீலகிரி நிர்மலா, மற்றும் நன்றியுரை அருட் சகோதரி வினோசா மற்றும் அருள் சகோதரி ஜோஸ்பின் ஹெட்ரூட் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கு உள்ள உரிமைகள், சட்டங்கள், போக்சோ சட்ட நிகழ்வுகள், பெண்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சிறப்பு அழைப்பாளரான கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஜீவானந்தம் எடுத்துரைத்தார். பெண்கள் முழு சுதந்திரத்துடன் துணிச்சலுடன் வன்முறைகள்ளுக்கு எதிரான செயல்பாட்டுடன் வாழ வேண்டும் என கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிதிபதி வனிதா அவர்கள் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியி ல் ஏராளமான பெண்கள் பெண்கள் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



