ஈரோடு ஜூன் 3 வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா ஈரோட்டில் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் தமிழரசன் வரவேற்றார்
.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் .ஈரோடு மாவட்ட தலைவர் சண்முக வேல் பொருளாளர் உதயம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்.நிரந்தர கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் உள்ளது .ஆனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது. மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழகம் முழுவதும் உள்ளது. பல்வேறு மார்க்கெட்டுகளில் இதுபோன்று சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மார்க்கெட்டில் சுங்க கட்டணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. இது குறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கும் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இந்த பிரச்சினைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படவில்லை என்றால் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் தொடர் கடை அடைப்பு போராட்டம் நடத்தி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics