கிருஷ்ணகிரி ஆக18:
கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியின் சார்பில் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தியாகு தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாதையன் வரவேற்புரை ஆற்றினார். மண்டல துணைச் செயலாளர் மின்னல் சக்தி மாவட்ட பொருளாளர் முனிராவ், மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் நிர்வாகிகள் தமிழ்மணி, நந்தன், அசோகன், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், திராவிடர் கழக நிர்வாகி திராவிட மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியின் பொழுது தொல். திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 500 ஏழை பெண்களுக்கு இலவச புடவைகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, திராவிட ராஜா, ராஜேந்திரன், செந்தில், இந்திரகுமார், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சசிகுமார் ஒன்றிய பொருளாளர்கள் ரகு, அருண், சிவக்குமார், நிர்வாகிகள் கோவிந்தராஜ், வேலு, சக்தி, சேகர், சங்கர், ஜெகன், சாமுவேல், மங்கலம் ஓட்டல் யோகா, புலிவளவன், ராஜேந்திரன், அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார். முன்னதாக கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.