நாகர்கோவில் ஏப்ரல் 21
தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சரும் கழக தணிக்கைக்குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு வடசேரி அண்ணாசிலை அருகில் பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குமரி மண்ணின் மைந்தன் சுரேஷ் ராஜன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பிடிப்பால் தனது இளம் வயதில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு தீவிர தொண்டராக எல்லோராலும் அறியப்பட்டவர் ஆவார். தொடர்ந்து தலைமை கழகம் அறிவிக்கும் போராட்டங்களில் முன்னின்று செயலாற்றியதால் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆனார்.
இவர் தனது 33 வது வயதில் திமுக அமைச்சரவையில் இடம் பிடித்தவர்.
இவரால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சிலரால் பின்னப்பட்ட வலையில் சிக்கிக்கொண்ட இவர் தனது இளம் வயதில் திராவிட கொள்கையின் பிடிப்பில் எவ்வாறு பற்றுதல் கொண்டிருந்தாரோ அதைவிட அதிகமாக பற்றுதலுடன் செயலாற்றி வந்தார். இதனால் தொண்டர்கள் இவரை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தனர்.
இவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது குமரி மாவட்டத்தில் திமுக அசுர வளர்ச்சியை கண்டது. ஆனால் இவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது முதல் குமரியில் திராவிட முன்னேற்ற கழகம் வலுவிழந்து விட்டதாக திமுகவினரே குற்றம் சாட்டி வந்தனர். தான் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தொண்டர்களை அரவணைத்து செல்வதில் சுரேஷ் ராஜன் தனி கவனம் செலுத்தி வந்தார். இதனால் இவரை சுற்றி திமுக தொண்டர்கள் எப்போதும் இருந்து வந்தனர்.
இந்நிலையை நன்கு உணர்ந்த தலைமை குமரி மாவட்ட திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவராக அரசு பதவி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்ட சுரேஷ் ராஜனுக்கு குமரி மாவட்ட திமுக தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சுரேஷ் ராஜன் பேசியதாவது:-
கழகம் எனும் கோட்டையில் தொண்டர்களே பிரதானம்,அவர்களே நீதிபதிகள்.
அப்படிப்பட்ட நீதிபதிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் நான் சேவகனாக தொடர்வதை எனக்கு மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றதற்காக கொடுத்த வரவேற்பின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
உங்களின் அன்பு,பாசம் கழகம் எனும் கோட்டையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை மக்களிடம் எடுத்து செல்கிறோம்,மகிழ்ச்சி.
இந்த நேரத்தில் வரவேற்பில் கலந்துக்கொண்டு வாழ்த்திய அத்துனை கழகத் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன்.
கழகம் தந்த பாதையில் கலங்காமல் பயணித்த எனக்கு கழக தொண்டர்களின் அன்பான அரவணைப்பு இன்னும் என்னை பல உயரத்தை அடைய செய்கிறது.
அந்த நிலை தற்போது இப்படியான பொறுப்பை வழங்கி சிறப்பு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின்-க்கும் இந்த நேரத்தில் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் இதயமாய் மட்டுமல்ல,கழகத் தொண்டர்களின்,தமிழ்நாடு மக்களின் இதய துடிப்பாய் வாழும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க என்னுடைய துறை சார்ந்த மக்கள் நலன் பணி தொடரும். அதே வேளையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் நமது கூட்டணி கட்சிகள் கைப்பற்ற நாம் அதி தீவிரமாக செயலாற்ற வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் உற்சாக உரையாற்றினார்.



