திருப்பத்தூர்:மார்ச்:22, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இக்கூட்டத்தில், வாணியம்பாடி பகுதியில் வாரம் சனிக்கிழமை நாளில் வார சந்தை மற்றும் காலடி சந்தை செயல்பட்டு வந்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் நின்று போனது ஆகவே மீண்டும் சனிக்கிழமை நாளில் வார சந்தை மற்றும் கால்நடை சந்தை செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தும்பேரி பகுதியில் அவ்வப்போது மின்சாரம் தடைபடுகிறது. குறிப்பாக வோல்டேஜ் குறைவாக செயல்படுவதால் விவசாய தேவை, அத்தியாவசிய தேவைகள் குறைபாடு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் புரியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டு பேசினர்.
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் UDR க்கு முன்பு பதிவு செய்துள்ள பத்திரங்களை எடுத்து படித்து தெளிவுபடுத்துவதற்கும், EC எடுப்பதற்கும் முறையான அலுவலர்கள் இல்லை. மேலும் பத்திரம் செய்தவர்களுக்கும் விற்பனை செய்தவர்களுக்கும் இந்த நிலை பெரும் சிரமமாக உள்ளது ஆகவே பழைய பத்திரங்களை முறையாக படிப்பதற்கு தகுந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மிண்ணூர் துணை மின் நிலையத்திலிருந்து விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், நாச்சியார் குப்பம் ஆகிய பகுதிகளுக்கு விவசாயம் செய்ய மும்முனையாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இரண்டு பகுதிகளாக பிரித்து காலை முதல் 12 மணி வரை மீண்டும் மதியம் 12:00 மணி முதல் இரவு வரை தவணை முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் காலை 6:00 மணி முதல் 12 வரை மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூமிக்குப்பம் ஊராட்சியில் கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் காலை மாலை பேருந்து இருக்கு நன்றி செல்லும் நிலை உள்ளது. அதனால் அப்பகுதியில் கோடை வெயிலினை கருத்தில் கொண்டு நிழற் கூடம் அமைக்க கோரிக்கை வைத்தனர். மேலும் வாணியம்பாடி பகுதியில் கல்லாறு சீரமைக்கும் பணியினை முறையாக செயல்படுத்தி பாலாற்றுடன் இணைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியம் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் எனது அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 6 லட்சம் தொகையினை வங்கி கடனாக பெற்றிருந்தேன் தற்பொழுது அந்த முழு தொகையினை வழங்கினால் மட்டுமே புதுப்பித்து தர முடியும் என்று கூறுகின்றனர். தற்போது உள்ள நிலையில் வட்டி தொகையினை மட்டும் என்னால் செலுத்த முடியும் முழு தொகையை செலுத்த இயலாது ஆதலால் மாவட்ட ஆட்சித் தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் திருப்பத்தூர் அடுத்த மண்டலநாயன குண்டா பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது ஆதலால் விவசாயத்தினை முறையாக செய்ய முடியவில்லை என்று கூறிய நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர் விரைவில் அவர் பகுதியில் தொந்தரவு செய்யும் குரங்குகளை பிடித்து காடுகளை விடுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.