சென்னை. ஜூன்,16,
வீ ஒர்க் ஐ.டி நிறுவனம் கிண்டியில் ஒலிம்பியா சைபர் ஸ்பேஸ் வளாகத்தில் சென்னையின் முதல் கிளையை தொடங்கியது .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ” வீ ஒர்க் ” நிறுவன தலைமை செயல் அலுவலர் கிரண் விர்வாணி தெரிவித்ததாவது:- ” வீஒர்க ” சேவை வழங்கும் நிறுவனம்
டெல்லி, குரு கிராமம், நொய்டா, மும்பை பெங்களூரு,பூனே,மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 70,000 பணியானர்களுடன் வெற்றிகரமாக செயல் பட்டுவருகிறது.
தற்போது சென்னையிலும் தனது தடத்தை பதித்துள்ளது.
சென்னை மாநகரம் மற்ற இந்திய நகரங்களை விட தனித்துவம் மிக்கதாக உணர்கிறோம்.
இங்கு அனைத்து தரப்பு மக்களும் வேலை வாய்ப்பு தொழில் வணிக ரீதியாக சம அளவில் ஈடுபடுகின்றனர் .
இதனால் இங்கு தொழில் வளர்ச்சி அதிகளவில் காணப்படுகிறது. ‘ சென்னை
எங்கள் வீ ஒர்க் நிறுவனம் புதிய யுக்திகளை கையாள ஒரு சுதந்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம் புதிய கருத்துருவாக்கங்கள் செய்து உலகலாவிய
புதிய வாடிக்கையாளர் கவரும் விதத்திலும், ஏற்கனவே பெற்ற நிறுவனங்களை தக்க வைத்து கொள்வதிலும் வீ ஒர்க் முனைப்புடன் செயல்படும்.
தென்னிந்தியா முழுவதும் எங்களது விரிவாக்கத்தில் ஒரு முக்கிய தருணமாக சென்னை வருகை எதிர்பார்க்கிறோம்.
வளைந்து கொடுக்கும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் பணியிடங்கள் மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் புதுமை மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதற்கு நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம் என்று கூறினார்