கம்பம்.
தேனி மாவட்டம், முல்லை பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் இன்று (01.06.2024) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க, பெரியாறு வைகை வடிநில கோட்டம் (நீர்வளத்துறை), செயற்பொறியாளர்.அன்புச்செல்வம், அவர்கள் தலைமையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் (01.06.2024) கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 200 கனஅடி/ விநாடி வீதமும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி/ விநாடி வீதமும் என மொத்தம் 300 கனஅடி/ விநாடி வீதம் 120 நாட்களுக்கு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்,
இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.மயில்வாகனன் (உத்தமபாளையம்), குமார் (பெரியார் அணை), உதவி பொறியாளர்கள் . பிரேம் ராஜ்குமார் (கம்பம்), பிரவீன்குமார் (பழனிசெட்டிபட்டி), .ராஜகோபால் (கம்பம்), .நவீன்குமார் (தேக்கடி) மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.