தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அவர்கள் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி ஆகியோர் இன்று (04.10.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் வட்டாட்சியர் திருமதி.லட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித்தலைவர் திருமதி.பிருந்தா, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மா.பூங்கொடி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன், பாப்பாரப்பட்டி செயல்அலுவலர் கோமதி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சே.தமிழ்செல்வி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.



