காஞ்சிபுரம் மே 16
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குளத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஜேகே டயர் தொழிற்சாலை சார்பில் சமூகப் பொறுப்புணர் திட்ட நிதி எண் கீழ் ரூபாய் 7.43 லட்சத்தில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு ஜேகே டயர் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்ட மேலாளர் சகாயராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வல்லாரை அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேகே டயர் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆர்.எர்ணவீரன், குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தனசேகரன், பாத்திமா மணிகண்டன், வசந்தா கண்ணன், சங்கர், திலகா டில்லி ஜெயலட்சுமி சேகர், ராஜேஸ்வரி, சுதாகர் சேவாலயா அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.