தென்தாமரைகுளம் ஏப் 8
தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் ஆணைப்படி ,மாநில பொது செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி நேற்று வடக்கு தாமரைகுளம், வழுக்கம்பாறை,பிச்சை குடியிருப்பு ,லீபுரம்,ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய நிர்வாகி எட்வின் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார் உட்பட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.